[ecis2016.org] ‘2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ வழங்கும் திட்டங்களைக் கொண்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய் – PMAY) திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விவரிக்கிறது ecis2016.org-ன் இந்தச் செய்திக் கட்டுரை.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா?
நகர்புறத்திற்கான அனைவருக்கும் வீடு திட்டமான பிஎம்ஏஒய் – நகர்புறத் திட்டத்தை மத்திய அரசு 2022 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன்மூலம், இந்த திட்டத்தின்படி மானியக் கடன் திட்டத்தின் கீழ் பயனாளர்கள் செப்டம்பர் 30, 2022 வரையில் பயன்பெற முடியும். இந்த திட்டம் மேலும் 2024 வரையில் நீட்டக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You are reading: PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பற்றிய முழு விவரம்
கிராமங்களுக்கான பிஎம்ஏஒய் திட்டத்தை அதன் இலக்கான 2.95 கோடி வீடுகள் கட்டுத் தருவதை உறுதி செய்வதற்காக, இந்த திட்டத்தின் கால அளவை 2024-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அமைச்சரவை நீட்டித்துள்ளது. இந்த திட்டம் மார்ச் 31, 2022-க்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முன்பு கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிஎம்ஏஓய் திட்டத்தின் காலக்கெடு என்பது மார்ச் 31, 2022 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பிஎம்ஏஓய் திட்டத்தின்படி மானியக் கடன் பெறுவதற்கான கடைசி தேதியும் மார்ச் 31, 2022 ஆக இருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டிருந்தாலும், அடக்கவிலையில் வீடுகளை பெறுவதற்கான பிரிவு 88இஇஏ-ன் கீழ் வழங்கப்படும் சலுகைகள் மார்ச்31, 2022-ல் முடிவடைந்துவிட்டது. ஏனென்றால், கடந்த 2022-23 பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
PMAY என்றால் என்ன?
இந்தியாவில் வீடுகளின் பற்றாக்குறையை அகற்றி, நகர்ப்புறங்களையும் கிராமங்களையும் மையப்படுத்தி அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற இலக்குடன் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 1-ல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பிஎம்ஓய்ஏ – நகர்புறம், பிஎம்ஓய்ஏ – கிராமப்புறம் என்ற இரண்டு அங்கங்களாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் முன்பு, பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா – ஷாஹிர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் என வழங்கப்பட்டது.
PMAY: முக்கிய சிறப்பம்சங்கள்
PMAY-ன் முழு விரிவாக்கம் | பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா |
பிஎம்ஏஒய் திட்டக் கூறுகள் | பிஎம்ஏஓய் – நகர்புறம் என்கிற பிஎம்ஏஓய் – ஷாஹ்ரி
பிஎம்ஏஓய் – கிராமப்புறம் என்கிற பிஎம்ஏஓய் கிராமின் |
அதிகாரபூர்வ வலைதளம் | PMAY நகர்ப்புறம்: https://pmaymis.gov.in/
PMAY கிராமப்புறம்: http://iay.nic.in/ |
தொடங்கப்பட்ட நாள் | ஜூன் 25, 2015 |
காலக்கெடு | பிஎம்ஏஓய் – நகர்ப்புறம்: செப்டம்பர் 30,2022
பிஎம்ஏஓய் – கிராமப்புறம்: மார்ச் 31, 2024 |
முகவரி | பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்புறம்) மத்திய நகர்ப்புற வீடுகள் விவகாரத்துறை அமைச்சகம், நிர்மான் பவன், புதுடெல்லி – 110011 |
பிஎம்ஏஒய் கூறுகள் | குடிசைப் பகுதிகளை மறுமேம்பாடு செய்வது
கடனை மானியத் திட்டத்தில் இணைத்தல் கூட்டாண்மையில் குறைந்த விலை வீடுகள் பயனாளி தலைமையிலான கட்டுமானத் திட்டம் |
கட்டணமில்லா தொடர்பு எண்கள் | 1800-11-6163 – HUDCO
1800 11 3377, 1800 11 3388 – NHB |
PMAY: ஒர் அறிமுகம்
கடந்த 1990-களில் இருந்து மத்தியில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளுமே வீடில்லா இந்திய மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண திட்டங்கள் வகுத்திருக்கின்றன. (உதாரணமாக 1990-ன் இந்திரா ஆவாஸ் யோஜனா மற்றும் 2009-ன் ராஜீவ் ஆவாஸ் யோஜனா). எனினும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2015-ம் ஆண்டு பரவலாக்கப்பட்ட ஒரு திட்டத்தை அறிவித்தது. இதன்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு வழங்குவதாக அரசு உறுதி அளித்தது. இந்த லட்சியத் திட்டம் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா அல்லது பிஎம்ஏஒய் என்று அறியப்படுகிறது.
- இந்த மாயாஜால நகரத்தை அதிகம் பயன்படுத்த டேராடூனில் பார்க்க வேண்டிய 15 இடங்கள்
- அயோத்தி: கோயில் நகரம் சொத்துக்களின் முக்கிய இடமாக மாறுகிறது
- PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பற்றிய முழு விவரம்
- லோனாவாலாவில் பார்க்க வேண்டிய 10 சிறந்த சுற்றுலா இடங்கள் மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்
- டூப்ளிகேட் வாக்காளர் ஐடிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆன்லைன் படிவத்தை நிரப்பும் வழிமுறைகளை அறிக
இதையும் வாசிக்க: PMAY நிலையை அறிவதற்கான நமது வழிகாட்டுதல்கள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பயனாளிகள்
குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து பிஎம்ஏஒய் திட்டத்தின் பயனாளிகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவை:
பயனாளிகள் | குடும்ப ஆண்டு வருமானம் |
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EWS) | ரூ.3 லட்சம் வரை |
குறைந்த வருமானப் பிரிவினர் (LIG) | ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை |
நடுத்தர வருமானப் பிரிவு-1 (MIG-1) | ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை |
நடுத்தர வருமானப் பிரிவு-2 (MIG-2) | ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை |
தகவல்: வீட்டுவசதி அமைச்சகம்
PMAY திட்டத்தின் கீழ் யார் யார் பயன்பெற முடியும்?
- ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி அல்லது திருமணமாகாத பிள்ளைகள் ஆகியோர் ஒரு குடும்பம் என பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் வரையறுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோருக்கு, அவருடைய பெயரிலேயோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரிலேயோ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.
- 21 சதுர அடிக்கும் குறைவான வீடு உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் இணையலாம்.
- குடும்பத்தில் உள்ள சம்பாதிக்கும் வயது வந்தவர்கள் தனிக் குடும்பமாக கருதப்படுவர். அதனால் அவர்களின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களும் இந்த திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவார்கள்.
- திருமணமான தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ, இந்த திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு தகுதி இருக்கும் பட்சத்தில் ஒரு தனி வீடு பெற தகுதி உடையவர் ஆவர்.
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், இந்த திட்டத்தின் 4 கூறுகளின் கீழும் பயன்பெற முடியும். குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உள்ள குடும்பத்தினர் மானியக் கடன் திட்டத்தில் மட்டுமே பயனடைய தகுதி உடையவர்கள்.
- பட்டியலின (SC) மற்றும் பழங்குடியினம் (SD) வகுப்பைச் சேர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பெண்களும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதி உடையவர்களே.
இதையும் வாசிக்க: விண்ணப்பத்தின் நிலையை அறிய பிஎம்ஏஒய் சிஎல்எஸ்எஸ் டிராக்கர் வலைதளத்தைப் பயன்படுத்துவது எப்படி?
பிஎம்ஏஒய் கிராமின் என்கிற PMAY கிராமப்புறம்
விவசாயத்தை மையமாகக் கொண்ட நமது பொருளாதாரத்தில், பெரிய அளவில் நகரமயமாதல் சூழல் இருந்த போதிலும், இந்திய மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் இன்னும் குடியிருக்க நல்ல வீடு இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு இந்திய பொது தணிக்கையாளரால் ஒரே நேரத்தில் செய்யப்பட்ட மதிப்பீடு மற்றும் செயல்திறன் தணிக்கையில் சில இடைவெளிகள் கண்டறியப்பட்டதால், இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY) திட்டத்தை மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) திட்டமாக மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ல் மறுசீரமைப்புச் செய்தது.
பிஎம்ஏஒய்-ஜி (அல்லது PMAY கிராமப்புறம்) திட்டத்தின் முக்கிய நோக்கமே இந்திய கிராமங்களில் உள்ள குடிசை வீடுகளை (மண் சுவர், ஓலை மற்றும் வைக்கோல்களால் வேயப்பட்ட கூரை முதலானவை கடுமையான வானிலை நிலவும் காலங்களில் வசிக்க முடியாதவை) காரை வீடுகள் (pucca homes) ஆக (நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய வகையில், அனைத்து காலநிலைகளில் வசிக்கக்கூடிய வகையிலான செங்கல், சிமென்ட் இரும்பு போன்றவற்றால் கட்டப்பட்டது) மாற்றுவதே ஆகும்.
பிஎம்ஏஒய் – கிராமப்புறம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை
கடந்த 2019-ம் ஆண்டு வீட்டுவசதித் துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி, பிஎம்ஏஒய்-ஜி திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டி முடிக்க சராசரியாக 114 நாட்கள் ஆகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 1.26 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பிஎம்ஏஒய்-ஜி திட்டத்தின் கீழ், சமவெளிப் பகுதிகளில், ஒரு காரை வீடு கட்டுவதற்கு ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதி, வடகிழக்கு மாநிலங்கள், கடினமான பகுதிகள், ஜம்மு – காஷ்மீர் போன்ற இடங்களில் ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.1.30 லட்சமும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் 25 சதுர அடியில் கட்டப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பிஎம்ஏஒய் – கிராமப்புற திட்டத்தின் பயனாளிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறன் சாராத வேலையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டுவதற்காக ரூ.12,000 கூடுதல் பயனாக பெறமுடியும்.
பிஎம்ஏஒய் ஷாஹ்ரி என்கிற PMAY நகர்ப்புறம்
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கப்பட்ட பிஎம்ஏஓய் – நகர்ப்புறம் திட்டம், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டான 2022-ம் ஆண்டுக்குள் நகர்புறத்தில் வசிக்கும் தகுதி உள்ள அனைவருக்கும் குடியிருக்க ஒரு வீடு என்பதை உறுதி செய்வதன் மூலம் நகர்புறத்தில் உள்ள வீடுகளின் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டது. இந்தத் திட்டத்தின் மூலம், 2 கோடி வீடுகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கட்டங்கள்
Read also : மீன் தொட்டி வாஸ்து: உங்கள் வீட்டுக்கு நேர்மறை நன்மைகள் நல்கும் வாஸ்து மீன் வளர்ப்பு முறை
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.
கட்டங்கள் | முதற் கட்டம் | 2-வது கட்டம் | 3-வது கட்டம் |
தொடங்கும் தேதி | ஜனவரி 4, 2015 | ஜனவரி 4, 2017 | ஜனவரி 4, 2019 |
முடிவடையும் தேதி | ஜனவரி 3, 2017 | ஜனவரி 3, 2019 | ஜனவரி 3, 2022 |
எத்தனை நகரங்கள் | 100 | 200 | எஞ்சிய நகரங்கள் |
தகவல்: வீட்டுவசதி அமைச்சகம்
பிஎம்ஏஓய் திட்ட பயனாளிகளுக்கான மனை அளவுகள்
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் குறைந்த வருமான பிரிவினருக்கு 30 முதல் 60 சதுர மீட்டர்கள் வரையிலான மனை அளவில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. நடுத்தர வருமான பிரிவு 1-ஐ சேர்ந்தவர்களுக்கு 160 சதுர மீட்டரிலும், நடுத்தர வருமான பிரிவு 2-ஐ சேர்ந்தவர்களுக்கு 200 சதுர மீட்டரிலும் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.
PMAY வீடு அளவு
விண்ணப்பதாரர் பிரிவு | ஆண்டு வருமானம் ரூபாயில் | மனை அளவு சதுர மீட்டரில் | மனை அளவு சதுர அடியில் |
இடபிள்யூஎஸ் | 3 லட்சம் | 60 | 645.83 |
எல்ஐஜி | 6 லட்சம் | 60 | 645.83 |
எமஐஜி-1 | 6-12 லட்சம் | 160 | 1,722.33 |
எம்ஐஜி-2 | 12-18 லட்சம் | 200 | 2,152.78 |
ஆதாரம்: வீட்டுவசதி அமைச்சகம்
அரசு விதிகளின்படி, மனைப் பகுதி என்பது வெளிப்புறச் சுவர்களால் மூடப்பட்ட பகுதியை தவிர்த்து, குடியிப்புப் பகுதியின் உள்சுவர்களால் மூடப்பட்டுள்ள தரைப் பகுதி போன்ற நிகர பயன்பாட்டு பகுதிகளைக் குறிக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் குரித்து தெளிவான புரிதலைப் பெற, வாசிக்க வேண்டிய வழிகாட்டுதல் – மனைப் பகுதி
PMAY-ன் கூறுகள் / அம்சங்கள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ‘2022-க்குள் அனைவருக்கும் வீடு’ வழங்குவதற்கான இலக்கு நான்கு உட்கூறுகள் மூலம் அடைய திட்டமிடப்பட்டுள்ளது. அவை:
- குடிசைப் பகுதி மறுசீரமைப்பு (ISSR): குடிசைப் பகுதிகளில் உள்ள குடிசைகளுக்கு பதிலாக தகுதியுள்ள குடிசைவாசிகளுக்கு தனியார் பங்களிப்பின் மூலமாக வீடுகள் கட்டிக்கொடுப்பதன் மூலம் குடிசைப் பகுதிகளை மறுசீரமைப்பு செய்கிறது.
- மானியக் கடன் திட்டம் (CLSS): புதிய வீடுகள் கட்டுவதற்கு அல்லது ஏற்கெனவே உள்ள வீட்டைப் புதுப்பிப்பதற்கு குறைந்த வட்டியில் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வரையிலான வீட்டுக்கடன்களுக்கு மத்திய அரசு அரசு மானியம் வழங்குகிறது.
- கூட்டாண்மையில் குறைந்தவிலை வீடுகள் (AHP): இதன் மூலம் மாநில அரசு, மத்திய நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனியார் துறையுடன் கூட்டாகவோ இணைந்து ரூ.1,50,000 மானிய உதவியுடன் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக மலிவு விலையிலான வீட்டுத் திட்டங்களை உருவாக்கப்படுகிறது.
- தனிநபர் தலைமையிலான தனிநபர் வீடு கட்டுமானம் அல்லது மேம்படுத்துதல் (BLC): இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மத்திய அரசின் ரூ.1,50,000 மானிய உதவியுடன் புதியதாக வீடு கட்டவோ அல்லது இருக்கும் வீட்டை தாங்களே மேம்படுத்திக் கொள்ளவே வழிவகுக்கப்படுகிறது.
பிஎம்ஏஒய் மானியத்துடன் இணைந்த கடன் திட்டம் (CLSS)
பிஎம்ஏஒய் மானியத்துடன் இணைந்த கடன் திட்டத்தின் கீழ் கடன்பெறுபவர், தான் பெறும் மொத்த வீட்டுக்கடனில் ஒரு பகுதியை மானியமாகப் பெறலாம். இதற்கு, கீழ்கண்ட பயனாளர்கள் தகுதி பெறுவர்.
|
CLSS-ன் கீழ் பிஎம்ஒய்ஏ வட்டி மானியம்
வாங்குபவர்கள் பிரிவு | வட்டி மானியம் -ஆண்டுக்கு | மானியக் கடனுக்கான உச்சவரம்பு |
இடபிள்யூஎஸ் | 6.50% | ரூ.6 லட்சம் |
எல்ஐஜி | 6.50% | ரூ.6 லட்சம் |
எம்ஐஜி-1 | 4.00% | ரூ.9 லட்சம் |
எம்ஐஜி-2 | 3.00% | ரூ.12 லட்சம் |
ஆதாரம்: வீட்டுவசதி அமைச்சகம்
- மானியத் தொகையைத் தாண்டிய கூடுதல் கடன்கள், மானியம் அல்லாத வட்டி விகிகத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- கட்டிக்கொண்டிருக்கும் சொத்தை வாங்குவதற்கோ, ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குவதற்கோ அல்லது சொந்த வீடு கட்டுவதற்கோ மட்டுமே மானியக் கடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
- பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ், கடன் பெற்று பொருளாதாரத்தில் நலிந்த (EWS) மற்றும் குறைந்த வருமான பிரிவினர் (LIG) வாங்கும் வீடுகள், அந்த வீட்டுப் பெண்களின் பெயரில்தான் வாங்கப்பட வேண்டும். நிலத்தின் அடிப்படையில் அலகு உருவாக்கப்படும்போது, அவை பெண்களின் பெயரில் இருக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
PMAY மானியம் கணக்கிடல்
பிஎம்ஏஒய் அதிகாரபூர்வ வலைதளத்தின் https://pmayuclap.gov.in/content/html/Subsidy-Calc.html – இந்தப் பக்கத்தில் உள்ள மானியம் கணக்கீடுவதற்கான கால்குலேட்ரைப் பயன்படுத்தி, மானியக் கடன் திட்டதில் உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும், அதற்கான வட்டி மானியம் எவ்வளவு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும். இதற்காக உங்கள் ஆண்டு வருமானம், கடன் தொகை, கடன் காலம், வீட்டின் வகை (குடிசை அல்லது காரை) உரிமை வகை (பொருளாதாரத்தில் நலிந்த EWS மற்றும் குறைந்த வருமானம் உள்ள LIG பிரிவினருக்கு வீட்டின் உரிமை என்பது பெண்கள் பெயரில் இருப்பது அவசியம்) வீடு இருக்கும் பகுதி ஆகிய விவரங்களை நீங்கள் உள்ளிட வேண்டும்.
மானியத் தொகையைக் காட்டுவதைத் தவிர, அந்தப் பக்கத்தில் மானியத்தின் வகைகளையும் பார்க்கலாம். உதாரணமாக இடபிள்யூஎஸ், எல்ஐஜி, எம்ஐஜி-1 அல்லது எம்ஐஜி-2
PMAY-ன் கீழ் பல்வேறு வகையினருக்கான மானியத் தொகைகள்
பிஎம்ஏஒய் – சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் கடன் பெறுவர்களின் வகையைப் பொறுத்து, அவர்கள் பெறும் கடனுக்கான மானியம் வழங்கப்படுகிறது.
கடன் வாங்குபவர் வகை | இடபிள்யூஎஸ் | எல்ஐஜி | எம்ஐஜி-1 | எம்ஐஜி-2 |
மானியத்தொகை | ரூ.2.20 லட்சம் | ரூ.2.67 லட்சம் | ரூ.2.35 லட்சம் | ரூ.2.35 லட்சம் |
ஆதாரம்: வீட்டுவசதி அமைச்சகம்
பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் பெறப்படும் அதிகபட்ச மானியம் எவ்வளவு?
பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.2.67 லட்சம் (ரூ.2,67,280) வழங்கப்படுகிறது.
PMAY வீட்டுக் கடன் மானிய பலனைப் பெறும் காலம்
பொருளாதாரத்தில் நலிந்த இடபிள்யூஎஸ் பிரிவினர், குறைந்த வருமான எல்ஐஜி பிரிவினர்களுக்கு ஜூன் 17, 2015 அல்லது அதற்குப் பிறகு வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு மானியப் பலன் பெறமுடியும். எம்ஐஜி எனப்படும் நடுத்தர வருமானப் பிரிவு-1, பிரிவு-2 வகையினருக்கு ஏப்ரல் 1, 2017 அல்லது அதற்குப் பின்னர் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு மானியப் பலன் கிடைக்கும்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் உங்களுக்கு மானியம் எப்படி வந்தடையும்?
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத்திற்கான உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், பயனாளி வீட்டுக் கடனைப் பெற்றிருக்கும் வங்கிக்கு (பிரதம கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அரசு ஆவணங்களில் PLI என குறிப்பிடப்படுகிறது) மத்திய நோடல் ஏஜென்சி (CNA) மூலமாக நிதி பரிமாற்றம் செய்யப்படும். வங்கி அந்தத் தொகையை கடனாளியின் வீட்டுக் கடன் கணக்கில் வரவு வைக்கும். இந்தப் பணம் உங்கள் நிலுவையில் உள்ள வீட்டுக் கடன் அசலில் இருந்து கழிக்கப்படும். நீங்கள் பிஎம்ஏஒய் மானியமாக ரூ.2 லட்சம் பெற்றிருந்தால், உங்கள் கடன் தொகை ரூ.30 லட்சமாக இருந்தால், மானியத்திற்குப் பிறகு ரூ.28 லட்சமாகக் குறையும்.
இதையும் வாசிக்க: இடபிள்யூஎஸ் மற்றும் எல்ஐஜி பிரிவுக்கு PMAY வட்டி மானியத் திட்டம் எப்படி?
CLSS குறித்து மேலதிக தகவல் பெற உதவி எண்கள்
NHB கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
1800-11-3377
1800-11-3388
HUDCO கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
1800-11-6163
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு 2022-ல் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் பிஎம்ஏஒய் திட்டத்தின் பலன்களுக்கு ஆதார் அட்டை உள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க, உங்கள் ஆதார் எண்ணை கையில் வைத்துக்கொண்டு https://pmaymis.gov.in வலைதளத்தை பார்வையிட வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், ‘citizen assessment’ பட்டனின் கீழ் உள்ள ‘apply online’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் நான்கு பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Read also : MGVCL மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது பற்றிய அனைத்தும்
நீங்கள் சிஎல்எஸ்எஸ் மானியத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உங்களது விண்ணப்பத்தை வீட்டுக் கடன் வழங்குவோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பிஎம்ஏஒய் திட்டத்திற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியான விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களில் (சிஎஸ்சி) கிடைக்கக்கூடிய படிவங்களைப் பெற்று நிரப்பலாம். பிஎம்ஏஒய் மானியப் படிவத்தை வாங்குவதற்கு கட்டணமாக ரூ.25 மற்றும் ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும். இந்தியாவின் கிராமப்புறங்களில் அத்தியாவசியமான பொதுப் பயன்பாட்டு சேவைகளைப் பெற CSC-கள் முக்கியமான மையங்களாகும்.
PMAY CLSS மானியத்திற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி
எம்ஐஜி-1 மற்றும் எம்ஐஜி-2 பிரிவினர் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் மானியக் கடன் திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 2020-ல் அறிவித்தார். எனினும், எல்ஐஜி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும்.
பிஎம்ஏஒய் திட்டத்தில் இருந்து மானியத் தொகையைப் பெறுவதற்கான காலம்
ஒரு விண்ணப்பத்தின் நடைமுறை நிறைவு பெறுவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம்.
ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றவர்கள் 2021 பிஎம்ஏஒய் மானியக் கடனுக்குக் கீழ் மானியம் பெற முடியுமா?
ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கிய நபர், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் விதிமுறைகள், நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், 2021-ம் ஆண்டில் பிஎம்ஏஒய் மானியக் கடன் திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெறலாம். மானியப் பலன் பெற நினைக்கும் வீட்டுக் கடன்பெற்ற நபர் பொருளாதாரத்தில் நலிந்த இடபிள்யூஎஸ் பிரிவினர், குறைந்த வருமான எல்ஐஜி பிரிவனராக இருந்தால், ஜூன் 17, 2015 அல்லது அதற்குப் பின்னர் வாங்கப்பட்ட வீட்டுக் கடனுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல நடுத்தர வருமான எம்ஐஜி பிரிவு-1, பிரிவு-2 வகையினருக்கு ஏப்ரல் 1, 2017 அன்று அல்லது அதற்குப் பிறகான வீட்டுக் கடன்களுக்கு மானியப் பலன் கிடைக்கும்.
PMAY வீட்டுக் கடன்: நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்
- பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து வீட்டுக் கடன் கணக்குகளும் பயனாளியின் ஆதார் எண்களுடன் இணைக்கப்படும்.
- மானியம் அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
- பயனாளி எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறாரோ, அந்த வங்கியில் உள்ள வட்டி விகிதம் கடன் வழங்குபவரால் வசூலிக்கப்படும்.
- பயனாளி ஏற்கெனவே மானியக் கடன் திட்டத்தின் கீழ் வட்டி மானியப் பலனைப் பெற்றிருந்து, குறைந்த வட்டி பலன்களைப் பெற கடன் பெற்ற வேறு வங்கிக்கு மாறினால், அவர் மீண்டும் வட்டி மானியப் பலனுக்கான தகுதியை இழந்து விடுவார்.
பிஎம்ஏஒய் மானிய நிலையைத் தெரிந்துகொள்வது எப்படி?
சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பயனாளியின் பிஎம்ஏஒய் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ள முடியும். உங்கள் பிஎம்ஏஒய் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ள, எங்களின் படிப்படியான இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றலாம். PMAY விண்ணப்ப நிலையை நீங்கள் தெரிந்துகொள்வது எப்படி?
PMAY விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
பிரதம மந்திரியின் வீடு வழங்கம் திட்டத்துக்கான PMAY அதிகாரபூர்வ வலைதளத்துக்குச் சென்று ‘Citizen Assessment’ ஆப்ஷனில் க்ளிக் செய்ய வேண்டும். அப்போது வரும் டிராப்-டவுன் மெனுவில் ‘Track Your Assessment Status’ ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தவுடன் ட்ராக் அசெஸ்மென்ட் படிவம் வரும். அதில், ‘பெயர், தந்தையின் பெயர், மொபைல் எண்’ அல்லது ‘மதிப்பீட்டு ஐடி’ இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்திற்கு தேவையான விவரங்களை கொடுத்த பின்னர், ‘ ‘Submit’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றியவுடன், ‘Print’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
PMAY திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்கள் வழங்கும் வங்கிகள்
- எஸ்பிஐ
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- பேங்க் ஆஃப் பரோடா
- ஹெச்டிஎஃப்சி பேங்க்
- ஆக்சிஸ் பேங்க்
- ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்
- பந்தன் பேங்க்
- பேங்க் ஆஃப் இந்தியா
- ஐடிபிஐ பேங்க்
- கனரா வங்கி
PMAY பற்றிய முக்கிய தகவல்கள்
பிஎம்ஏஒய் திட்டத்தின்படி CAN என்பதன் விரிவாக்கம்
CAN என்ற சொல் central nodal agency என்கிற மத்திய நோடல் ஏஜென்சியைக் குறிக்கிறது. பிஎம்ஏஒய் திட்ட விஷயத்தில், தேசிய வீட்டு வசதி வங்கி (NHB), HUDCO மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி ஆகியவை மத்திய நோடல் ஏஜென்சிகளாக நியமிக்கப்பட்டுள்ளன.
PMAY-க்கான மதிப்பீட்டு ஐடியைப் பெறுவதற்கான வழிமுறை
கடன் விண்ணப்பதாரர் பதிவுச் செயல்முறைகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், பிஎம்ஏஒய்-க்கான மதிப்பீட்டு அடையாள எண், பிஎம்ஏஒய் திட்டத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தால் உருவாக்கப்படுகிறது. விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ள இந்த ஐடி பயன்படுத்தப்படுகிறது.
பிஎம்ஏஒய் வீட்டுக் கடன் வழங்க தகுதியுடைய வங்கிகள்
பிஎம்ஏஒய் திட்டத்தின் பல்வேறு வகைகளின் கீழ் வீட்டுக் கடன் வழங்க அதிக எண்ணிக்கையிலான வங்கிகள், வீட்டு நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NFC) மத்திய நோடல் ஏஜென்சிகளான HUDCO, பாரத ஸ்டேட் வங்கி, தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) உடன் இணைந்துள்ளன.
பிஎம்ஏஒய் திட்டத்தின் அதிகாரபூர்வ ஆவணங்களின் கீழ் முதன்மைக் கடன் வழங்கும் நிறுவனங்களாக (PLIs) முறையாகப் பெயரிடப்பட்ட இந்த நிதி நிறுவனங்கள், 2017-ல் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 244-க்கும் அதிகமான நிறுவனங்கள், தனிப்பட்ட வீடு வாங்குபவர்களுக்கு மானியக் கடன் வழங்குகின்றன. பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களுக்கு கடன் மானியம் வழங்கும் முதன்மையான அரசு மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
PMAY மானியம் கிடைக்கக் கூடிய முதன்மையான பொதுத்துறை வங்கிகள்
வங்கி | வலைதளம் | மத்திய நோடல் ஏஜென்சி |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | www.sbi.co.in | NHB |
பஞ்சாப் நேஷனல் பேங்க் | www.pnbindia.in | NHB |
அலகாபாத் பேங்க் | www.allahabadbank.in | NHB |
பேங்க் ஆஃப் பரோடா | www.bankofbaroda.co.in | NHB |
பேங்க் ஆஃப் இந்தியா | www.bankofindia.com | NHB |
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா | www.bankofmaharashtra.in | NHB |
கனரா வங்கி | www.canarabank.in | NHB |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா | www.centralbankofindia.co.in | HUDCO |
கார்ப்பரேஷன் பேங்க் | www.corpbank.com | NHB |
தேனா பேங்க் | www.denabank.co.in | NHB |
ஐடிபிஐ பேங்க் | www.idbi.com | NHB |
இந்தியன் பேங்க் | www.indian-bank.com | NHB |
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் | www.iob.in | NHB |
ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் | www.obcindia.co.in | NHB |
பஞ்சாப் & சிந்த் பேங்க் | www.psbindia.com | NHB |
சிண்டிகேட் பேங்க் | www.syndicatebank.in | NHB |
யூகோ பேங்க் | www.ucobank.com | NHB |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | www.unionbankonline.co.in | NHB |
யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா | www.unitedbankofindia.com | NHB |
விஜயா வங்கி | www.vijayabank.com | HUDCO |
PMAY மானியம் கிடைக்கக் கூடிய முதன்மையான தனியார் வங்கிகள்
வங்கி | வலைதளம் | மத்திய நோடல் ஏஜென்சி |
ஆக்சிஸ் பேங்க் | www.axisbank.com | NHB |
ஐசிஐசிஐ பேங்க் | www.icicibank.com | NHB |
ஹெச்டிஎஃப்சி பேங்க் | www.HDFC.com | NHB |
கோடக் மஹேந்திரா பேங்க் | www.kotak.com | NHB |
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் | www.lichousing.com | NHB |
கர்நாடகா பேங்க் | www.karnatakabank.com | NHB |
கரூர் வைஸ்யா பேங்க் | www.kvb.co.in | NHB |
ஐடிஎஃப்சி பேங்க் | www.idfcbank.com | NHB |
ஜம்மு & காஷ்மீர் பேங்க் | www.jkbank.net | HUDCO |
பந்தன் பேங்க் | www.bandhanbank.com | NHB |
தனலக்ஷ்மி பேங்க் | www.dhanbank.com | HUDCO |
டியுட்சே பேங்க் ஏஜி | www.deutschebank.co.in | NHB |
சவுத் இந்தியன் பேங்க் | www.southindianbank.com | HUDCO |
லக்ஷ்மி விலாஸ் பேங்க் | www.lvbank.com | NHB |
ஆதர் ஹவுசிங் ஃபைனான்ஸ் | www.aadharhousing.com | NHB |
ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் | www.adityabirlahomeloans.com | NHB |
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் | www.bajajfinserv.in | NHB |
பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் | www.pnbhousing.com | NHB |
PMAY நகர்ப்புறத்துக்கான மாநில அளவிலான நோடல் ஏஜென்சிகள்
மாநிலம் | நிறுவனம் | முகவரி | இமெயில் ஐடி |
அந்தமான் & நிகோபார் தீவுகள் | அந்தமான் & நிகோபார் தீவுகளின் யூடி | நகராட்சி கவுன்சில், போர்ட் ப்ளேர் – 744101 | jspwdud@gmail.com |
ஆந்திர பிரதேசம் | ஆந்திர பிரதேச டவுன்ஷிப் கட்டுமான மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடட் | ஃப்ளாட் எண் 502, விஜய லக்ஷ்மி ரெசிடென்சி , குந்தாலா, விஜயவாடா – 520004 | aptsidco@gmail.com
mdswachhandhra@gmail.com |
ஆந்திரப் பிரதேசம் | ஆந்திரப் பிரதேச மாநில வீட்டுவசதி கார்ப்பரேஷன் லிட் | ஏபி ஸ்டேட் ஹவுசிங் கார்ப்பரேஷன் லிட், ஹிமாயத் நகர், ஹைதராபாத் – 500029 | apshcl.ed@gmail.com |
அருணாச்சல பிரதேசம் | அருணாச்சல பிரதேச அரசு | நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை, Mob-II, இதாநகர் | chiefengineercumdir2009@yahoo.com
cecumdirector@udarunachal.in |
அசாம் | அசாம் அரசு | ப்ளாக் A, அறை எண் 219, அசாம் தலைமைச் செயலகம், திஸ்புர், கவுகாத்தி – 781006 | directortcpassam@gmail.com |
பிஹார் | பிஹார் அரசு | விகாஸ் பவன், பெய்லி சாலை, புதிய தலைமைச்செயலகம், பாட்னா – 15, பிஹார் | sltcraybihar@gmail.com |
சண்டிகர் | சண்டிகர் வீட்டுவசதி வாரியம் | தலைமைச் செயலகம் 9D, சண்டிகர், 160017 | தலைமைச் செயலகம் 9D, சண்டிகர், 160017 |
சத்தீஸ்கர் | சத்தீஸ்கர் அரசு | மகாநதி பவன், மந்த்ராலயா டி நகர் ராய்ப்பூர், சத்தீஸ்கர், அறை எண் S-1/4 | pmay.cg@gmail.com |
தாத்ரா & நாகர் ஹவேலி அண்டு டாமண் & டயு | தாத்ரா & நாகர் ஹவேலி அண்டு டாமண் & டயுவின் யூடி | தலைமைச் செயலகம், சில்வாஸ்ஸா, 396220 | devcom-dd@nic.in |
தாத்ரா & நகர் ஹவேலி | தாத்ரா & நகர் ஹவேலியின் யூடி | தலைமைச் செயலகம், சில்வாஸ்ஸா, 396220 | pp_parmar@yahoo.com |
கோவா | கோவா அரசு | GSUDA 6-வது மாடி, ஷ்ராம்சக்தி பவன், பட்டோ – பனாஜி | gsuda.gsuda@yahoo.com |
குஜராத் | குஜராத் அரசு | அஃபர்டபிள் ஹவுசிங் மிஷன், நியூ சச்சிவாலா, ப்ளாக் எண் 14/7, 7-வது மாடி, காந்திநகர் – 382010 | gujarat.ahm@gmail.com
mis.ahm2014@gmail.com |
ஹரியாணா | மாநில நகர்ப்புற மேம்பாட்டு முகமை | பே 11-14, பலிகா பவன், செக்டர் 4, பஞ்ச்கவுலா – 134112, ஹரியாணா | suda.haryana@yahoo.co.in |
ஹிமாச்சல் பிரதேசம் | நகர்ப்புற மேம்பாட்டு இயக்குநரகம் | பலிகா பவன், தல்லாந்த், சிம்லா | ud-hp@nic.in |
ஜம்மு &காஷ்மீர் | ஜம்மு &காஷ்மீர் வீட்டுவசதி வாரியம் | Jkhousingboard@yahoo.com
raysltcjkhb@gmail.com |
|
ஜார்க்கணட் | நகர்ப்புற மேம்பாட்டுத் துறை | 3-வது மாடி, அறை எண் 326, எஃப்எஃப்பி பில்டிங், துவ்ரா, ராஞ்சி, ஜார்க்கண்ட், 834004 | jhsltcray@gmail.com
director.ma.goj@gmail.com |
கேரளா | மாநில வறுமை ஒழிப்புத் திட்டம் | TRIDA பில்டிங், ஜேஎன் மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம் போஸ்ட் | uhmkerala@gmail.com |
மத்தியப் பிரதேசம் | நகர்ப்புற நிர்வாகம் மட்டும் மேம்பாட்டுத் துறை | GoMP பலிகா பவன், சிவாஜி நகர், போபால், 462016 | addlcommuad@mpurban.gov.in
mohit.bundas@mpurban.gov.in |
மகாராஷ்டிரா | மகாராஷ்டிர அரசு | கிரிஷா நிர்மான் பவன், 4-வது மாடி, கலாநகர், பந்த்ரா (கிழக்கு), மும்பை, 400051 | mhdirhfa@gmail.com
cemhadapmay@gmail.com |
மணிப்பூர் | மணிப்பூர் அரசு | நகரத் திட்ட துறை, மணிப்பூர் அரசு, இயக்குநர வளாகம், வடக்கு AOC, இம்பால் – 795001 | hfamanipur@gmail.com
tpmanipur@gmail.com
|
மேகாலயா | மேகாலயா அரசு | ராய்ட்டாங் பில்டிங், மேகாலயா சிவிக் தலைமைச் செயலகம், ஷில்லாங், 793001 | duashillong@yahoo.co.in |
மிசோரம் | நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை | தாக்திங் த்லாங். அய்ஸ்வால், மிசோரம், 796005 | hvlzara@gmail.com |
நாகலாந்து | நாகலாந்து அரசு | நகராட்சி விவகாரப் பிரிவு, ஏஜி காலனி, கோஹிமா – 797001 | zanbe07@yahoo.in |
ஒடிஷா | வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை | 1-வது மாடி, மாநிலத் தலைமைச் செயலகம், இணைப்பு – பி, புவனேஷ்வர் – 751001 | ouhmodisha@gmail.com |
புதுச்சேரி | புதுச்சேரி அரசு | டவுன் & நாட்டுப்புற திட்டத் துறை, ஜவஹர் நகர், பூமினாபேட், புதுச்சேரி – 605005 | tcppondy@gmail.com |
பஞ்சாப் | பஞ்சாப் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் | புடா பவன், செக்டர் 62, எஸ்ஏஎஸ் நகர், மொஹாலி, பஞ்சாப் | office@puda.gov.in
ca@puda.gov.in |
ராஜஸ்தான் | ராஜஸ்தான் நகர்ப்புற குடிநீர், வடிகால் & கட்டுமானக் கழகம் | 4-SA-24, ஜவஹர் நகர், ஜெய்ப்பூர் | hfarajasthan2015@gmail.com |
சிக்கிம் | சிக்கிம் அரசு | நகர்ப்புற மேம்பாடு & வீட்டுவசதி துறை, சிக்கிம் அரசு, NH 31A, கங்டோக், 737102 | gurungdinker@gmail.com |
தமிழ்நாடு | தமிழ்நாடு அரசு | தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், எண் 5, காமராஜர் சாலை, சென்னை – 600005 | raytnscb@gmail.com |
தெலங்கானா | தெலங்கானா அரசு | 3-வது மாடி, ஏசி கார்ட்ஸ் பப்ளிக் ஹெல்த், லக்டிகாபூல், ஹைதராபாத் | tsmepma@gmail.com |
திரிபுரா | திரிபுரா அரசு | நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, திரிபுரா அரசு, பண்டிட் நேரு வளாகம், கொராகா பஸ்தி, 3-வது மாடி, காத்யா பவன், அகர்ட்டாலா, 799006 | sipmiutripura@gmail.com |
உத்தராகண்ட் | நகர்ப்புற மேம்பாட்டு இயக்குநரகம் | மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், 85ஏ, மோதர்வாலா சாலை, அஜாபூர் கலன், டேராடூன் | pmayurbanuk@gmail.com |
கர்நாடகா | கர்நாடக அரசு | 9-வது மாடி, விஷ்வேசரய்யா டவர்ஸ், டாக்டர் அம்பேத்கர் வீதி, பெங்களூரு, 560001 | dmaray2012@gmail.com |
மேற்கு வங்கம் | மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் | இல்கஸ் பவன், ஹெச்சி ப்ளாக், செக்டர் 3, பிதான்நகர், கொல்கத்தா – 700106 | wbsuda.hfa@gmail.com |
உத்தரப் பிரதேசம் | மாநில நகர்ப்புற மேம்பாட்டு முகமை | நவ்சேத்னா கேந்திரா, 10, அசோக் மார்க், லக்னோ 226002 | hfaup1@gmail.com |
ஆதாரம்: PMAY வலைதளம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இந்தியாவில் குறைந்த விலையில் வீடுகள் என்பது சாத்தியமா?
இந்தியாவில் குறைந்த விலையில் வீடு என்று சொல்வது சற்று கடினமே. இருந்தபோதிலும், அடமானக் கடனுக்கான எளிய அணுகுமுறை, நீண்ட காலக் கடன், அதிக கடன் மதிப்பு விகிதங்கள், வரிச்சலுகைகள் ஆகியவை வீட்டு வாங்குவதை சற்று மலிவாக மாற்றியுள்ளன.
PMAY-க்கு இந்தியாவில் ஏழைகளுக்கான குறைந்த விலை வீட்டுத் திட்டம் இருந்ததா?
குறைந்த விலையில் வீடுகளை வழங்குவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன (தேசிய வீட்டுக் கொள்கை – 1994; ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் பணி – 2005; ராஜீவ் ஆவாஸ் யோஜனா – 2013) பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) 2015-இல் தொடங்கப்பட்டது. ‘2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ வழங்குவது என்பது இந்தத் திட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. இந்த புதிய திட்டம், பிஎம்ஏஒய் – நகர்ப்புறம் (PMAY-U), பிஎம்ஏஒய் – கிராமப்புறம் (PMAY-G) என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் பணி – 2005 இன்னும் செயலில் உள்ளதா?
இல்லை. பிஎம்ஏஒய் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முந்தைய அனைத்து நகர்ப்புற வீட்டுத் திட்டங்களையும் உள்ளடக்கியது. 2022-க்குள் 2 கோடி நகர்ப்புற வீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Source: https://ecis2016.org/.
Copyright belongs to: ecis2016.org
Source: https://ecis2016.org
Category: Tamil