[ecis2016.org] யுஏஎன் (UAN) என்பது ஒவ்வொருவரும் தங்களது ஈபிஎஃப் (EPF) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வருங்கால வைப்புநிதித் திட்ட கணக்கில் பங்களிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 12 இலக்க தனித்துவ எண் ஆகும். யுஏஎன் லாகின் நடைமுறைகளையும், இந்த எண்ணை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் நாங்கள் விளக்குகிறோம்.
உங்களுடைய ஈபிஎஃப் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் சேவைகளையும் அறிவதற்கு வழிவகுக்கும் முக்கியக் கருவியாகவே உங்களது யுஏஎன் லாகின் திகழ்கிறது. ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் (PF) கணக்கை லாகின் செய்து பயன்படுத்துவதற்கு உரிய படிப்படியான நடைமுறைகளை தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் வழிகாட்டுதலை இங்கே தருகிறோம். உங்களது யுஏஎன் லாகின் மூலம் கீழ்க்கண்டவற்றை நீங்கள் செய்ய முடியும்.
You are reading: UAN உள்நுழைவு: யுஏஎன் உறுப்பினர் EPFO Login செய்து வலைதளத்தை பயன்படுத்துவது எப்படி?
- ஈபிஎஃப் பாஸ்புக் டவுன்லோடு செய்யலாம்
- யுஏஎன் அட்டையை டவுன்லோடு செய்யலாம்
- முந்தைய உறுப்பினர் ஐடிக்களை பட்டியலிடலாம்
- கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்கலாம்
- ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் க்ளைம் செய்வதற்கான தகுதியை தெரிந்துகொள்ளலாம்
- தனிப்பட்ட விவரங்களை திருத்தலாம்
யுஏஎன் என்றால் என்ன?
யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்பதன் சுருக்கமே யுஏஎன். யுஏஎன் என்பது ஒவ்வொருவரும் தங்களது ஈபிஎஃப் கணக்கில் பங்களிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 12 இலக்க தனித்துவ எண் ஆகும்.
இதையும் வாசிக்க: யுஏஎன் எண்ணை பயன்படுத்தி பிஎஃப் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?
யுஏஎன் உள்நுழைவுக்காக UAN கண்டறிவது எப்படி?
படி 1: யுஏஎன் வலைதளம் சென்று பாருங்கள்.
படி 2: ‘Important Links’ என்ற ஆப்ஷனுக்கு கீழே வலது பக்கத்தில் உள்ள ‘Know your UAN’ என்ற ஆப்ஷன் பட்டனை அழுத்துங்கள்.
படி 3: உங்கள் மொபைல் எண்ணையும் Captcha-வையும் சரிபார்த்தலுக்காக அளியுங்கள். இந்த விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்த பின்பு, ‘Request OTP’ பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
படி 4: உங்களது மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஆறு இலக்க ஓடிபியை பெறுவீர்கள். இந்த ஓடிபியை சமர்ப்பித்து ‘Validate OTP’ ஆப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்.
படி 5: உங்களது ஓடிபி வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட உடனே ‘OK’ பட்டனில் க்ளிக் செய்து நடைமுறையைத் தொடருங்கள்.
படி 6: இப்போது உங்களிடம் கேட்கப்படும் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர் ஆகிய விவரங்கள் உடன் ஒரு கேப்ச்சாவையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு, ‘Show UAN’ பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
ஆதார் சமர்ப்பிக்க வேண்டிய இடத்தில் உங்களது பான் அல்லது உறுப்பினர் ஐடியையும் சமர்ப்பித்து உங்களது யுஏஎன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்பதையும் கவனித்தில் கொள்ளுங்கள்.
படி 7: உங்களது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் இப்போது திரையில் தெரியும்.
- இந்த மாயாஜால நகரத்தை அதிகம் பயன்படுத்த டேராடூனில் பார்க்க வேண்டிய 15 இடங்கள்
- PNB வாடிக்கையாளர் பராமரிப்பு எண்: ஒரு விரிவான வழிகாட்டி
- UAN உள்நுழைவு: யுஏஎன் உறுப்பினர் EPFO Login செய்து வலைதளத்தை பயன்படுத்துவது எப்படி?
- குத்தகை மற்றும் உரிம ஒப்பந்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
- எஸ்பிஐ சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது?
மாற்று வழியாக, உங்களது நிறுவனத்தினரிடம் நேரில் கேட்டோ அல்லது உங்களது சேலரி ஸ்லிப்பில் பார்த்தோ உங்களது யுஏஎன் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் வாசிக்க: வீடு வாங்குவதற்கு பிஎஃப் நிதியை பயன்படுத்துவது எப்படி?
யுஏஎன் உள்நுழைவு செய்ய உங்களது UAN-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?
Read also : லோனாவாலாவில் பார்க்க வேண்டிய 10 சிறந்த சுற்றுலா இடங்கள் மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்
உங்களது யுஏஎன் எண்ணை பயன்படுத்தி, உங்களது ஈபிஎஃப் கணக்கு விவரங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். இதற்கு, உங்கள் யுஏஎன் நம்பரை நீங்கள் ஆகிடிவேட் செய்ய வேண்டும். உங்கள் யுஏஎன் எண் மற்றும் பிஎஃப் உறுப்பினர் ஐடியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய படிப்படியான வழிமுறைகள் இதோ:
யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகள்
படி 1: EPFO தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘Services’ பிரிவுக்கு கீழே உள்ள ‘For Employees’ ஆப்ஷனை சொடுக்குங்கள்.
படி 2: ‘Services’ பிரிவுக்கு கீழே ‘Member UAN/Online Services’ என்ற ஆப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்.
படி 3: அடுத்தப் பக்கத்தில் ‘Important Links’-க்கு கீழே உள்ள ‘Activate UAN’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 4: அடுத்த பக்கத்தில், உங்களுடைய பான் நம்பர் அல்லது உறுப்பினர் ஐடி, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, செல்பேசி எண் ஆகியவற்றுடன் கேப்ச்சாவை சமர்ப்பிக்கவும். மேலும், ‘Get authorization PIN’ மீது சொடுக்குவதற்கு முன்பு உங்கள் ஆதார் நம்பரை அளிப்பதற்கான ஒப்புதலை அளிப்பதற்கு உரிய பெட்டியை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
படி 5: உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஓடிபியை பயன்படுத்தி, ‘Validate OTP and Activate UAN’ என்ற ஆப்ஷனை சொடுக்குங்கள். பி.எஃப் கணக்கை ஆக்சஸ் செய்வதற்காக யுஏஎன் ஆக்டிவேஷன் தொடர்பாக உங்களுக்கு ஈபிஎஃப்ஓ ஒரு எஸ்எம்எஸ் அனுப்பும்.
UAN உள்நுழைவு: வழிமுறைகள்
படி 1: ஈபிஎஃப்ஓ அதிகாரபூர்வ வலைதளத்தை நாடுங்கள்.
படி 2: யுஏஎன் நம்பர், பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சாவை நிரப்புக. அதன்பின் யுஏஎன் உறுப்பினர் தளத்தில் உள்ள ‘Sign In’ பட்டனை சொடுக்குங்கள்.
படி 3: யுஏஎன் லாகின் முகப்பு பக்கத்தில், உங்களது யுஏஎன் நம்பர், பிறந்த தேதி, ஆதார் எண், வங்கி கணக்கு எண்(கள்), பான் எண், இமெயில் ஐடி மற்றும் இதர விவகரங்களை உங்களால் பார்க்க முடியும். இந்த விவரங்கள் அனைத்தும் யுஏஎன் நம்பர் தளத்தில் நிரப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
படி 4: யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் உங்கள் யுஏஎன் லாகினை நிறைவு செய்த பின்னர், உங்களது முகப்புத் திரையில் கீழே சுட்டிக்காட்டப்படும் விவரங்களை நீங்கள் பார்வையிடலாம்.
1. யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘View’ ஆப்ஷனின் கீழ் நீங்கள் பார்க்கக் கூடியவை:
2. யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘Manage’ஆப்ஷனின் கீழ் நீங்கள் பார்க்கக் கூடியவை:
3. யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘Account’ ஆப்ஷனின் கீழ் நீங்கள் பார்க்கக் கூடியவை:
4. யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘Online Services’ ஆப்ஷனின் கீழ் நீங்கள் பார்க்கக் கூடியவை:
Read also : பார்க்க வேண்டிய உலகின் 15 சிறந்த இடங்கள்
மேற்கண்ட நடைமுறைகள் அனைத்துமே ஏற்கெனவே தங்களது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் தெரிந்துவைத்தவர்கள் யுஏஎன் எண் வலைதளத்தில் யுஏஎன் லாகின் செய்வதற்கானவை. இப்போது, தங்களது யுஏஎன் நம்பர் தெரியாதவர்கள் நிலை என்ன?
இதையும் வாசிக்க: ஈபிஎஃப் வீட்டுத் திட்டம் குறித்த முழு விவரம்
UAN உள்நுழைவில் உங்கள் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
படி 1: ஈபிஎஃப்ஓ அதிகாரபூர்வ வலைதளம் சென்று ‘Our Services’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து ‘For Employees’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 2: ‘Services’ மெனுவின் கீழ் தற்போது ஓபன் ஆன பக்கத்தில் ‘Member UAN/Online Service (OCS/OTCP)’ என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
படி 3: இப்போது, உங்களது யுஏஎன், பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சா ஆகியவற்றை அளித்து சைன் இன் செய்யுங்கள்.
படி 4: இப்போது, ‘Manage’ என்ற பட்டனுக்குச் சென்று ‘Contact Details’ என்ற ஆப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்.
படி 5: இப்போது திறந்திருக்கும் அந்தப் பக்கம், உங்களது செல்பேசி எண்ணையோ அல்லது இமெயில் ஐடியையோ மாற்றுவதற்கான வசதியை காட்டும்.
படி 6: செல்பேசி எண்ணை மாற்றும் ஆப்ஷனில் நீங்கள் சரிபார்த்த பிறகு, உங்களது புதிய செல்பேசி எண்களை இருமுறை கேட்டு கூடுதலான பெட்டிகள் திறந்திருக்கும். அவற்றை நிரப்பிய பிறகு, ‘Get Authorization Pin’ பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
படி 7: உங்களது புதிய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வந்த பிறகு, அதை இங்கே பயன்படுத்திய பின்னர், ‘Submit’ பட்டனை க்ளிக் செய்யுங்கள். இதுவே ஈபிஎஃப்ஓ வலைதளத்தில் உங்கள் செல்பேசி நம்பரை மாற்றுவதற்கான நடைமுறையின் நிறைவுப் பகுதியாகும்.
UAN உறுப்பினர் போர்டல் சேவைகள்‘காண்க‘ விருப்பத்தின் கீழ்
‘நிர்வகி‘ விருப்பத்தின் கீழ்
‘கணக்கு‘ விருப்பத்தின் கீழ்
‘ஆன்லைன் சேவைகள்‘ விருப்பத்தின் கீழ்
|
UAN என்றால் என்ன?
UAN யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பர் என்பது யுனிவர்சல் கணக்கு எண் என்பதன் சுருக்கமாகும். . இந்த 12-இலக்க கணக்கு எண் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பணம் செலுத்தும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்: UAN எண் மூலம் PF பேலன்ஸ் சோதித்தல்
UAN உள்நுழைவு வலைதளம் தொடர்பாக சந்தேகங்கள்
யுஏஎன் லாகின் வலைதளம் தொடர்பான சந்தேகங்களுக்கு நீங்கள் தொடர்புகொள்ள:
யுஏஎன் ஹெல்ப்டெஸ்க் எண் : 18001-18005
யுஏஎன் ஹெல்ப்டெஸ்க் இமெயில் ஐடி : uanepf@epfindia.gov.in
யுஏஎன் – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நான் இரண்டு யுஏஎன் எண்கள் வைத்திருக்க முடியுமா?
ஓர் ஊழியர் ஒரே ஒரு யுஏஎன் மட்டுமே வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், அவர் பல்வேறு பிஎஃப் ஐடிக்களை வைத்திருக்கலாம்.
யுஏஎன் எண்ணை ஒதுக்கிடு செய்வது யார்?
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) தான் ஊழியர்களுக்கு யுஏஎன் எண்கள் அனைத்தையும் ஒதுக்கீடு செய்கிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளித்துள்ளது.
ஆன்லைன் க்ளைம்களுக்கு யுஏஎன் கட்டாயமா?
ஆம், ஆன்லைன் க்ளைம்களுக்கு யுஏஎன் கட்டாயம்தான்.
பிஎஃப் எண் ஐடிக்கும், யுஏஎன் எண்ணுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
ஒரு மெம்பர் ஐடி அல்லது பிஎஃப் நம்பர் என்பது ஒரு நிறுவனத்தால் ஓர் ஊழியருக்கு வழங்கப்படுகிறது. இந்த மெம்பர் ஐடி ஆல்ஃபநியூமரிக் குறியீட்டில் இருக்கும். யுஏஎன் என்பதை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு ஊழியருக்குமே தனித்துவமான எண்ணாக இருக்கும். ஓர் உறுப்பினர் பல்வேறு உறுப்பினர் ஐடிக்களை வைத்திருக்கலாம்; ஆனால், ஒரே ஒரு யுஏஎன் எண்ணை மட்டுமே அவர்கள் வைத்திருக்க முடியும்.
யுஏஎன் என்பது ஊழியரின் பான் எண்ணும் இணைத்திருக்கப்பட வேண்டுமா?
ஆம், ஊழியரின் பான் எண்ணுடன் யுஏஎன் இணைத்திருக்க வேண்டும்.
என் யுஏஎன் எண்ணை நான் எப்படி கண்டறிவது?
உங்களது யுஏஎன் எண்ணை கண்டறிய epfindia.gov.in/memberinterface என்ற தளத்தின் பக்கத்தை நாடலாம். ‘Know your UAN Status’ என்ற ஆப்ஷனுக்குச் சென்று ட்ராப் டவுன் மெனு மூலம் உங்கள் மாநிலம், ஈபிஎஃப்ஓ அலுவலகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய பிஎஃப் எண்/உறுப்பினர் ஐடி, உங்கள் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண்கள் ஆகியவற்றுடன் கேப்ச்சாவை டைப் செய்து தொடரலாம்.
யுஏஎன் எண்ணும், பிஎஃப் எண்ணும் ஒன்றா?
இல்லை, யுஏஎன் என்பது ஒரு ஈபிஎஃப்ஓ உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் ஒரு யுனிவர்சல் ஐடி ஆகும். அதேநேரத்தில், அவர் பல பிஎஃப் ஐடிக்களை வைத்திருக்க முடியும். யுஏஎன் என்பது 12 இலக்க தனித்துவ எண்ணாகும். பிஎஃப் கணக்கு எண் என்பது 22 இலக்க தனித்துவ எண்ணாகும்.
யுஏஎன் எண்ணுக்கு உதாரணம் என்ன?
யுஏஎன் எண்ணுக்கான சில உதாரணங்கள் இதோ: 100904319456; 100985112956; 100920263757; 100896312605; 100296386154; 100419534363
யுஏஎன் எண்ணும், ஆதார் எண்ணும் ஒன்றா?
இல்லை, உங்கள் யுஏஎன் என்பது ஈபிஎஃப்ஓ சார்ந்த செயல்பாடுக்கான யுனிவர்சல் ஐடி ஆகும். உங்களது ஆதார் என்பது உங்களது பயோ-மெட்ரிக் ஐடி ஆகும்.
Source: https://ecis2016.org/.
Copyright belongs to: ecis2016.org
Source: https://ecis2016.org
Category: Tamil