Tamil

மீன் தொட்டி வாஸ்து: உங்கள் வீட்டுக்கு நேர்மறை நன்மைகள் நல்கும் வாஸ்து மீன் வளர்ப்பு முறை

[ecis2016.org] மீன் தொட்டிகள் என்பவை அனைத்து விதமான வாஸ்து சாஸ்திர குறைபாடுகளுக்கும் ஒரு தீர்வாக கருதப்படுகிறது.

உங்கள் வீட்டை நீர் சார்ந்து அலங்கரிக்க திட்டமிட்டால், மீன் தொட்டியை வைப்பதை விட சிறந்த யோசனை வேறு எதுவாக இருக்கும்? இருப்பினும், வீட்டில் மீன் வளர்ப்பதற்காக மீன் தொட்டி அமைப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

You are reading: மீன் தொட்டி வாஸ்து: உங்கள் வீட்டுக்கு நேர்மறை நன்மைகள் நல்கும் வாஸ்து மீன் வளர்ப்பு முறை

வீட்டில் மீன் தொட்டி அல்லது காட்சியகம் வைப்பது தொடர்பாகவும், அதிர்ஷ்ட மீன் வகைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் இங்கே பார்ப்போம்.

மீன் தொட்டி வைப்பதன் நன்மைகள்

  • அதிர்ஷ்ட மீன்கள் என்பவை நிதி நிலைமையை மேம்படுத்தவும், செல்வத்தையும் ஈர்க்கவும் வல்லவை. ஒருவரின் தொழிலையும் வருமானத்தையும் ஈர்க்கக் கூடிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி மேம்படுத்தக் கூடியதாகவும் மீன் தொட்டிகள் (Fish Tanks) திகழ்கின்றன.
  • மீன் தொட்டி வைத்திருப்பதால் அமைதியான சூழல் உருவாகி, கவலையும் மன அழுத்தமும் குறையும். ஏனெனில், மீன்களை நாம் கவனிப்பதும் ஒரு வகையான சிகிச்சை முறையாக உள்ளது. மீன் தொட்டிகளைப் பார்ப்பதில் நேரத்தை செலவிடுபவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.
  • வாஸ்துப் படி, மீன் காட்சியகம் (Fish Aquarium) அல்லது மீன் தொட்டிகள் வைத்திருப்பது, இல்லத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைவதற்கு ஒரு முக்கியக் காரணியாக கருதப்படுகிறது.
  • மீன்கள் உயிரோட்டத்தையும் நேர்மறையையும் குறிக்கின்றன. எனவேதான், தொட்டியில் நீந்தும் மீன் நேர்மறை உணர்வலைகளை வெளியிடுவதாக நம்பப்படுகிறது.
  • நல்ல அதிர்ஷ்ட மீனை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பதன் மூலம் நேர்மறையான உணர்வலைகளுடன் கூடிய மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.
  • வீட்டில் ஒரு மீன் தொட்டி இருப்பது, நம்மை சீரான மனநிலையில் வைத்துக் கொண்டு நமது செயல்திறனைக் கூட்ட உதவுகிறது. இந்த பெருந்தொற்று காலங்களில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும், தொலைதூரத்தில் வேலை செய்பவர்களுக்கும் இயற்கையுடன் ஒன்றி வாழ மீன் தொட்டி துணைபுரிகிறது.

இதையும் வாசிக்க: சிரிக்கும் புத்தரை வைப்பதற்கான வாஸ்து மற்றும் ஃபெங் சுய் குறிப்புகள்

மீன் தொட்டி வாஸ்து: மீன் தொட்டி எந்த திசையில் வைக்கப்பட வேண்டும்?

சரியான இடத்தில் வைக்கப்படும் மீன் தொட்டி நிச்சயம் உங்கள் வீட்டின் எந்த ஒரு பகுதிக்கும் உயிரோட்டம் அளிக்கும். ஒரு மீன் தொட்டியானது இல்லத்தை எதிர்மறை தீவினைகளிலிருந்து விடுவிக்கவும், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது. பல வாஸ்து குறைபாடுகளுக்கு மீன் தொட்டி ஒரு தீர்வாக செயல்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, லிவிங் ரூம் எனப்படும் நாம் அதிகம் புழங்கும் அறையின் தென்கிழக்கு திசையில் மீன் தொட்டி வைக்கப்பட வேண்டும். நீங்கள் வேறு அறையில் மீன் காட்சியகத்தை வைக்க விரும்பினால், வடக்கு திசையில் வைக்கலாம். அலுவலக வரவேற்பறையில், வடக்கு அல்லது கிழக்கில் மீன் காட்சியகம் வைக்கலாம். வடமேற்கு அல்லது தென்கிழக்கில் கூட வைத்துக்கொள்ளலாம்.

மீன் தொட்டி வாஸ்து: மீன் தொட்டி எந்த திசையில் வைக்கப்பட கூடாது?

வீட்டில் மீன் தொட்டியை தவறான திசையில் வைத்தால் துரதிர்ஷ்டம் ஏற்படும். படுக்கையறை அல்லது சமையலறையில் மீன் தொட்டிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது வீட்டில் வசிப்பவர்களுக்கு தூக்கம் அல்லது உணவு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். வீட்டின் நடுக்கூடத்தில் மீன் காட்சியகம் வைக்க பொருத்தமான இடம் அல்ல. ஏனெனில், இது நிதிச் சிக்கல்களை ஊண்டாக்கும். வெயில் படும் ஜன்னலுக்கு அருகில் மீன் காட்சியகத்தை வைக்க வேண்டாம். செல்வத்தை இழக்க வழிவகுக்கும் என்பதால் வீட்டின் தெற்கு திசையில் மீன் தொட்டியை வைக்காதீர்கள். மேலும், மீன் தொட்டியின் மீது பீம் எதையும் அமைக்கக் கூடாது. அதேபோல், மீன் தொட்டியை படிக்கட்டுகளுக்கு அடியிலும் வைக்கக் கூடாது. ஏர் கண்டிஷனருக்கு அருகில் மீன் தொட்டியை ஒருபோதும் வைக்க வேண்டாம். டிவி அல்லது ஸ்பீக்கருக்கு மிக அருகில் மீன் தொட்டியை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். டிவி திரையின் ஒளியும், ஸ்பீக்கர்களில் இருந்து வரும் உரத்த ஒலியும் சில மீன்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கலாம்.

சீன வாஸ்து என்று சொல்லப்படும் ஃபெங் சுய் (Feng shui) முறைப்படி, நீருக்கும் நெருப்புக்கும் இடையே ஆற்றல் மோதல் இருப்பதால், வழிபாடு செய்யும் மேடைகளுக்கு கீழேயோ அல்லது அதன் அருகிலேயோ மீன் தொட்டியை வைக்கக் கூடாது.

இதையும் வாசிக்க: நீரூற்றுகளுக்கான வாஸ்து சாஸ்திரக் குறிப்புகள்

மீன் தொட்டிகளை எந்த திசையில் வைக்க வேண்டும்?

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

இதையும் வாசிக்க: சுவர் கடிகார வாஸ்து

வீட்டில் மீன் வளர்ப்புக்கு உகந்த மீன் தொட்டி வடிவம் எது?

மீன் தொட்டிகள் பொதுவாக செவ்வகம், சதுரம் அல்லது வட்ட வடிவங்களில் இருக்கும். இருப்பினும், இது கன சதுரம், அறுகோணம், ஒரு மூலை மட்டும் சாய்ந்த நிலை வடிவம் (L வடிவம்) மற்றும் வில்-முன் (முன்பக்கம் வெளிப்புறமாக வளைந்திருக்கும்) போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் சிறந்த வடிவம் என்றால் அது வட்டம் அல்லது செவ்வகம் தான். வீட்டில் முக்கோண வடிவ மீன் தொட்டிகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சுத்தம் செய்ய ஏதுவாக எளிதான வடிவத்தையே எப்போதும் தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் வாசிக்க: அதிர்ஷ்டத்திற்காக வீட்டை அலங்கரிக்க வாஸ்து ஆமை உள்ளிட்ட கிரிஸ்டல் ஆமையை வைக்க சில குறிப்புகள் 

மீன் தொட்டிகளின் வகைகள்

  • தங்கமீன் தொட்டிகள் புதிதாக மீன் வளர்ப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. அத்துடன், வாஸ்து சாஸ்திரத்தின்படி மிகவும் மங்களகரமானதும் கூட. ஏனெனில், இவை நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகின்றன.
  • கம்யூனிட்டி காட்சியகங்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்களையும், தாவரங்களையும் கொண்டுவந்து வீட்டில் வளர்க்கப்படும்.
  • பிளான்ட்டட் அக்வாரியம்ங்களில் மீன்களை விட அதிகமான தாவரங்களே வளர்க்கப்படும். நீர்வாழ் செல்லப் பிராணிகளைத் தவிர, பசுமையான தோட்டத்தைக் காணும் மகிழ்ச்சியையும் இது வழங்குகிறது.
  • ஃப்ரெஷ் வாட்ட மீன் தொட்டிகளில் ஆறுகள் மற்றும் சிற்றோடைகளில் இருந்து வரும் மீன்கள் வளர்க்கப்படும். இதில், குளிரும் வெதுவெதுப்பும் மிகுந்த நீர் வகைகளில் வளரும் மீன்களும் வளர்க்கப்படும்.
  • சால்ட் வாட்டர் மீன்தொட்டிகளில் கடல் மற்றும் பெருங்கடல்களில் இருந்து வரும் மீன்கள் வளர்க்கப்படும். மீனை நன்றாகப் பராமரித்து வளர்க்க தண்ணீரை வடிகட்ட வேண்டியது அவசியம்.

இதையும் வாசிக்க: பணமும் அதிர்ஷ்டமும் தரும் வீட்டுத் தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வாஸ்து மீன் தொட்டி வைத்து வீட்டை அழகுற அலங்கரிப்பது எப்படி?

மீன் தொட்டிகள் வீட்டின் அழகையும் வசீகரத்தையும் கூட்டுவதுடன் அமைதி உணர்வையும் உருவாக்குகிறது. கவர்ச்சியான, வண்ணமயமான மீன்கள் கண்ணாடித் தொட்டிகளில் நீந்துவது ஓர் அழகான காட்சியாகும். இது, எந்த இடத்தையும் உத்வேகம் ஊட்டுவதாக மாற்றும். மீன் தொட்டியை தனியாக வைப்பதற்கு பதிலாக, வீட்டு வடிவமைப்பில் ஓர் அங்கமாக ஒருங்கிணைக்கலாம்.

டைனிங் டேபிள் ஃபிஷ் டேங்க் அல்லது ஸ்டடி டேபிள் டேங்க், பில்ட்-இன் சுவர் அல்லது ஹோம் ஆபிஸ் டிவைடர், பில்லர் டேங்க், பார் டேபிள் டேங்க், வாக் ஓவர் டேங்க், சுவர் டேங்க், போட்டோ ஃபிரேம் டேங்க் போன்று இடத்தையும் ஒருவரின் விருப்பத்தையும் பொறுத்து வீட்டின் அங்கமாக மீன் தொட்டியை வடிவமைக்கலாம்.

மீன் தொட்டிக்கான வாஸ்து அலங்கார பொருட்கள்

  • மீன் தொட்டிக்கு பல்வேறு அலங்காரச் செடிகள், கற்கள், கூழாங்கற்கள் மற்றும் சிலைகள் ஆகியவை அழகு சேர்க்கின்றன. இவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுங்கள். இவற்றை கலந்துகட்டியோ அல்லது முழுமையாக நிரப்ப வேண்டாம். ஒருவர் எந்த நிற சரளைக் கற்களையும் பயன்படுத்தலாம். ஆனால், ஒருவர் ஃபெங் சுய் முறையயைப் பின்பற்றினால், வடக்கில் நீலச் சரள் கல்லும், கிழக்கு அல்லது தென்கிழக்கில் பச்சை நிறத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மீன் தொட்டிக்கான உயிர்ப்புள்ள செடிகள் உள்ளன. நீங்கள் அவற்றையும் பயன்படுத்தலாம். ஜாவா பாசி, ஜாவா ஃபெர்ன், அமேசான் வாள், வாட்டர் விஸ்டேரியா மற்றும் பிற தாவரங்களையும் மீன் தொட்டியில் வளர்க்கலாம். பொதுவாக, தாவரங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஆனால், பிளாஸ்டிக் செடிகளைப் போல அல்லாமல் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். ஃபைபர் அலங்காரப் பொருட்கள் மற்றும் நிறங்களை வெளியிடாத பிளாஸ்டிக் செடிகளை மீன் தொட்டிகளில் பயன்படுத்தலாம். செல்வத்தை ஈர்க்கும் சிறிய நாணயங்களை மீன் காட்சியகத்தில் வைக்கலாம். ஆனால், அவற்றை பிளாஸ்டிக் உறையினால் போர்த்தி, உலோகம் நீரில் வேதியியல் வினையை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதேநேரத்தில், செப்பு நாணயங்களைத் தவிர்க்கவும்.
  • ஃப்ரெஷ் வாட்டர் மீன் தொட்டியில் அலங்காரத்திற்காக கடல் ஓடுகள் அல்லது பவளப் பாறைகளைப் பயன்படுத்த முடியாது.
  • உடைந்த அல்லது துண்டுத் துண்டாக உள்ள பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • அலங்காரத்திற்கு விளக்குகளைப் பயன்படுத்தும்போது, ஒருநாளைக்கு சுமார் 10 மணி நேரம் மட்டுமே மீன் தொட்டியில் இயக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீன்கள் இரவில் தூங்குவதற்கு இருள் அவசியம்.

மீன் வளர்ப்பு: இருளான தொட்டியில் ஒளிரும் அமைப்பு

இருண்ட மீன் தொட்டியை ஒளிரும் வகையில் அமைப்பதே இப்போது டிரெண்டில் உள்ளது. மீன் தொட்டியின் தரையில் உள்ள ஒரு சிறப்புப் பொருளால் செய்யப்பட்ட இருண்ட ஒளிரும் கூழாங்கற்களால் மீன்களுக்கு எந்தவிதமான கேடும் நச்சுத்தன்மையும் ஏற்படாது. செயற்கையாக ஒளிரும் ஜெல்லிமீனையும் தேர்வு செய்யலாம். குளோஃபிஷ் என்பது நன்னீர் இனத்தைச் சார்ந்தது. இது ஓர் அற்புதமான ஒளிரும் வண்ணத்தை மரபுரீதியாகக் கொண்டுள்ளது. குளோஃபிஷ் என்பது மரபணு மாற்றப்பட்ட ஜீப்ரா டேனியோ ஆகும், இது சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, நீலம் மற்றும் ஊதா போன்ற பல்வேறு ஒளிரும் நியான் நிறங்களில் வருகிறது. இவை வர்ணம் பூசப்படவோ அல்லது சாயமிடப்படவோ இல்லை. குளோஃபிஷ் வெள்ளை ஒளியின் கீழ் சாதாரணமாகத் தோன்றும்; ஆனால், நீலம் மற்றும் கருப்பு ஒளியின் கீழ் ஒளிரும். நீர் புகாத எல்.இ.டி லைட் மூலம் மீன் தொட்டியை ஒளிரச் செய்யலாம். இது குறைந்த வெப்பத்தை உருவாக்குவதுடன் மீன் தொட்டியை வர்ணஜாலம் நிகழ்த்தச் செய்யும்.

வாஸ்து, ஃபெங் சுய் முறையில் மீன் மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம்

வாஸ்து சாஸ்திரத்தில் மீனும் நீரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மீன் தொட்டியின் உள்ளே நீரின் அலைகள் உருவாவது வீரியமிக்க நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைக் குறிக்கிறது. மீன்கள் செல்வம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை ஈர்க்கின்றன. விஷ்ணுவின் அவதாரங்களில் மீன்கள் முதல் அவதாரமாகவும், நேர்மறை ஆற்றலின் ஆதாரமாகவும் நம்பப்படுகிறது. பசித்த மீன்களுக்கு உணவு கொடுப்பது நல்ல கர்மமாக கருதப்படுகிறது. வெவ்வேறு வண்ண மீன்கள் வீட்டில் நேர்மறை எண்ண அலைகளைக் கூட்டுகின்றன. செழிப்பையும் செல்வத்தையும் கூட்டுகின்றன. ஒரு வண்ணமயமான மீனுக்கு வாஸ்து குறைபாடுகளைத் திருத்தும் ஆற்றலும், சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலைத் தகர்க்கும் வல்லமையும் உண்டு.

Read also : ecis2016.org தடையற்ற வாங்குபவர்-விற்பனையாளர் தொடர்புகளை செயல்படுத்த புதிய வீட்டு அரட்டை அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது

ஃபெங் சுய் முறையின்படி, மீன் தொட்டிக்கு பாசிட்டிவ் எனர்ஜியை ஈர்த்து மிகுதியாகக் கொண்டுவரும் திறன் நிறைந்துள்ளது. இது நெகட்டிவ் எனர்ஜியையும் உறிஞ்சிவிடும். ஃபெங் சுய் முறையில் இடம்பெற்றுள்ள நீர், மரம், உலோகம், பூமி மற்றும் நெருப்பு ஆகிய ஐந்து கூறுகளையும் ஒரு மீன் தொட்டி ஒத்திசைத்து சமநிலைப்படுத்தி, விண்வெளியில் ஆற்றலை பலப்படுத்துகிறது. ஆற்றலைக் கூட்டுவதற்கு உங்கள் மீன் தொட்டிகளில் குமிழ்களை உருவாக்க ஏரேட்டரைப் பயன்படுத்துங்கள். இது வீட்டில் உள்ள ‘சி’ ஆற்றலான நேர்மறைப் புலத்தை வெகுவாக கூட்டும்.

ஃபெங் சுய் மீன் தொட்டிகளில் மீன்களின் நிறங்கள்

தங்கம் அல்லது வெள்ளை நிறத்தில் உள்ள அதிர்ஷ்ட மீன் குறிப்பது உலோகப் பொருள் ஆகும். உலோகமானது தண்ணீரை உருவாக்குவதால், அவை நல்ல அதிர்ஷ்டத்தைக் கூட்டுவதுடன் செழிப்பையும் ஈர்க்கிறது. கருப்பு, நீலம் அல்லது சாம்பல் நிறத்தில் உள்ள மீன், நீருடன் தொடர்புடையது. ஃபெங் சுய் முறைப்படி அவை மிகுதியாக ஈர்ப்பதனால் அதிக பயனுள்ளதாக நம்பப்படுகிறது.

கருப்பு போன்ற அடர் வண்ண மீன்கள், தங்க நிற மீன்களுடன் இருந்தால் நல்லது; ஆனால், கருப்பு நிறத்தை விட தங்கம் எப்போதும் அதிகமாக இருக்க வேண்டும். எ.கா: இரண்டு தங்கம் மற்றும் ஒரு கருப்பு, எட்டு தங்கம் மற்றும் ஒரு கருப்பு. ஒரு கருப்பு தங்க மீன் (கருப்பு மூர்) முக்கியமானது. ஏனெனில், இது வீட்டின் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சுகிறது. சிவப்பு மற்றும் ஊதா மீன்கள் நெருப்புடன் தொடர்புடையவை. தண்ணீரை நெருப்பு ஆவியாக்குவதால், அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதில் பலவீனம் உண்டாகும். மஞ்சள் அல்லது பழுப்பு மீன் பூமியுடன் தொடர்புடையதால் பண அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதில் பலவீனம் ஆகிறது.

வீட்டில் மீன் இறந்தால் என்ன பலன்? – மீன் தொட்டிக்கான வாஸ்து குறிப்புகள்

  • சுறுசுறுப்பாக சுற்றிக்கொண்டே இருக்கும் மீன்களைத் தேர்ந்தெடுங்கள். இது ஆற்றலின் சீரான ஓட்டத்தை உறுதி செய்யும்.
  • மீன் தொட்டியில் உள்ள அதிர்ஷ்ட மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருக்க வேண்டும். அவற்றில் எட்டு டிராகன் மீன் அல்லது தங்க மீன்களாக இருக்கலாம்; ஒன்று கருப்பு மீனாக இருக்க வேண்டும்.
  • மீன் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மீன் தொட்டியைப் பராமரிக்க தேவையான வடிகட்டிகள், காற்றோட்டம் மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றை நிறுவுங்கள்.
  • வீட்டிற்கு ஒரு பெரிய அளவில் மீன் தொட்டி அல்லது மீன் காட்சியகம் தேர்வு செய்ய வேண்டும். இதனால், அனைத்து மீன்களும் சுற்றிச் செல்ல போதுமான இடம் இருக்கும். கண்ணாடி அல்லது அக்ரிலிக் மூலம் செய்யப்பட்ட தொட்டிகளைத் தேர்ந்தெடுங்கள்.
  • வாஸ்து முறைப்படி, மீன் அக்வாரியம் அல்லது மீன் தொட்டியில் மீன் வைப்பது அனைத்து வகையான வாஸ்து குறைபாடுகளுக்கும் ஒரு முக்கியப் பரிகாரமாக கருதப்படுகிறது.
  • வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பது உங்கள் வீட்டை அனைத்து தீமைகளிலிருந்தும் விடுவிக்கும். மீன்களில் ஒன்று இறந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், இது வீட்டில் அல்லது அலுவலகத்தில் உங்கள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இருப்பினும், உடனடியாக இறந்த மீனுக்கு பதிலாக வேறொரு மீனை வாங்கி வைத்துவிடுங்கள்.

இதையும் வாசிக்க: உங்கள் வீட்டை செல்லப் பிராணிகளுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி?

வாஸ்து மற்றும் ஃபெங் சுய் முறைப்படி எவை சிறந்த மீன்கள்?

மீன்கள் மிகவும் அரிதான நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றாகும். வாஸ்து மற்றும் ஃபெங் சுய் முறைப்படி, அவை வீட்டின் உட்புறத்தை அழகுபடுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், வீட்டின் உரிமையாளர்களுக்கு நேர்மறை அதிர்வலைகளையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகின்றன.

மங்களகரமான அதிர்ஷ்டமாகக் கருதப்படும் சில அதிர்ஷ்ட மீன் வகைகள் இங்கே:

அரோவானா அல்லது டிராகன் மீன்

மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் மீன்களில் ஒன்றான அரோவானா மீன் ஓர் அதிர்ஷ்ட மீன். இது செல்வம், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. இது கோல்டன் டிராகன் என்றும் அழைக்கப்படுகிறது.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

தங்கமீன்

ஃபெங் சுய் முறையில் சுட்டிக்கப்பட்டும் மற்றொரு நல்ல அதிர்ஷ்ட மீன் தான் இந்த தங்கமீன் (Goldfish). இது பல்வேறு வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் மற்றும் துடுப்பு வகைகளில் கிடைக்கிறது. இந்த அதிர்ஷ்ட மீனை மீன் தொட்டியில் வைப்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் இந்த மீன் அழகையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது.

Shape of an aquarium for the home Aquariums are usually rectangular, square or round. However, it can be made in a variety of shapes, such as cuboid, hexagonal, inclined fit in a corner (L-shaped) and bow-front (where the front side curves outwards). Ideal shapes which bring good luck are circular or rectangular. Avoid triangular shaped fish aquariums at home. Always opt for a shape which is easier to clean. Types of aquariums Goldfish aquariums are apt for beginners and most auspicious as per Vastu Shastra, as they bring good luck. Community aquariums house fishes from different regions and also plants. Planted aquariums have more plants than fish. It also gives one the pleasure of a green garden, besides aquatic pets indoor. Freshwater aquariums have fish that come from rivers and creeks and come in both, cold and warm water varieties. A saltwater aquarium has fish from seas and oceans. The water will need to be filtered to maintain fish life. How to enhance home décor with aquarium Vastu An aquarium can enhance the aesthetic appeal of home and create a feeling of serenity. Exotic, colourful fishes swimming in glass tanks are a lovely sight, which can make any space vibrant. Instead of just placing an aquarium, creatively integrate it in the home design. Depending on the space and one’s choice, you can opt for a dining table fish tank, or study table tanks, built-in wall or home office divider, pillar tanks, bar table tanks, walk over tanks, wall tanks, photo frame tanks, etc. Vastu décor items for aquarium Various decorative plants, stones, pebbles, or figurines, add to the beauty of the aquarium. Select only a few and do not not clutter or fill the tank completely. One can use any colour of gravel but if one is following Feng Shui, then, opt for blue gravel in the north and green in the east or south-east. Aquarium live plants are available, which can be used. Keep plants such as java moss, java fern, Amazon sword, water wisteria and others. Live plants are auspicious, unlike plastic plants but will require more maintenance. Any fibre decor items and plastic plants which do not emit colours, can be used in fish tanks. Small coins that attract wealth can be kept in the aquarium but wrap them in plastic and also ensure that the metal does not affect the water chemistry. Avoid copper coins. In fresh water aquariums, one cannot use sea shells or corals for décor. Avoid broken or chipped accessories. When using lights for decoration, remember that aquarium lighting should be switched on for approximately 10 hours a day. Fish need darkness to sleep at night. Glow in the dark aquarium Glow in the dark aquarium is in trend now. The glow-in-the-dark luminous pebbles made from a special material that lies on the floor of the fish tank are fish-friendly and non-toxic. One also can opt for artificial glowing jellyfish. GloFish is an aquarium fish (freshwater species) that has inherited a brilliant fluorescent colouration. The GloFish is a genetically modified zebra danio that comes in several different fluorescent neon colours such as red, green, orange, blue, and purple they are not painted or dyed. GloFish appear normal under white light but becomes fluorescent under blue and black light. One can also illuminate the aquarium with waterproof LED light which produces less heat and can be cleverly concealed in the aquarium for the magical glow. Significance of fish and water in Vastu and Feng Shui Fish and water have their significance in Vastu – moving water inside a fish tank represent vigour and positive energy flow. Fishes attract wealth, happiness and peace. Fishes are believed to be the first reincarnation of Lord Vishnu and are a source of positive energy. Feeding food to hungry fish is considered to be good karma. Different-coloured fishes boost the positive vibrations in the house, improving prosperity and wealth. A colourful fish amends Vastu flaws and reduces any negative energy around. According to Feng Shui, aquariums have the ability to attract positive energy or ‘chi’ and bring abundance. It also absorbs negative energy. An aquarium harmonises and balances the five Feng Shui elements of water, wood, metal, earth and fire that strengthen the energy in the space. For energy enhancement, add an aerator to create bubbles in your aquarium. This will escalate the ‘chi’ energy field at home. Colours of the fish in Feng Shui aquariums Good luck fish in gold or white colour symbolise the metal element. Since metal generates water, they enhance good fortune and attract prosperity. Fish in black, blue, or grey colour, are associated with the water element. They are also effective in attracting abundance according to Feng shui. Dark coloured fish such as black are good when accompanied by gold coloured fish, but there should always be more gold than black, e.g. two gold and one black, eight gold and one black. The one black goldfish (black moor) is important as it absorbs the negative energy of the home. Red and purple fish are associated with the fire element. Since fire drains the water, therefore, their effect of boosting the good fortune is weak. Yellow or brown fish is linked with the earth element, its effect of attracting monetary luck is weak. Vastu tips for fish aquarium Select fishes that are active and keep moving around. This will ensure smooth flow of energy. The number of lucky fishes in an aquarium should be nine, out of which eight can be either dragon fish or goldfish and one has to be a black fish. Clean the tank or the fish pot frequently. Install the necessary requisites like filters, aeration and water circulation to maintain the tank. Opt for a large fish tank or fish aquarium for home, so that there is enough space for all the fishes to move around. Prefer tanks made of glass or acrylic. As per Vastu, placing fish in an aquarium or fish pot is considered one of the major remedies for all kinds of Vastu defects. Keeping a fish aquarium at home tends to free your home from all the evils. Do not fret if one of your fish dies, as it also means an end to your problems at home or office. However, immediately replace the fish as soon as possible. [ecis2016.org] How to make your home pet-friendly Best fishes as per Vastu and Feng Shui Fishes are among the most incredible aquatic creatures. As per Vastu and Feng Shui, they not only help in beautifying the house interiors but also bring positive vibes and good luck for the homeowners. Here are some of the lucky fish breeds that are considered auspicious lucky: Arowana or dragon fish One of the most expensive aquarium fishes, Arowana fish is a lucky fish that is said to bring wealth, good health, happiness, and prosperity. It is also referred to as the golden dragon.

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

பிளாக்மூர்

மீன் தொட்டியில் வளர்க்கப்படும் பிளாக்மூர் (Blackmoor) எனப்படும் இந்த கருப்பு மீன் வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதன் மூலம் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. தங்கமீன் கொண்ட ஒரு சிறிய மீன் தொட்டியில் வண்ண மாறுபாட்டைக் கொண்டுவருவதற்கு இந்தக் கருப்பு மீனை இடுவது ஒரு சிறந்த யோசனையாகும்.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

பட்டாம்பூச்சி கோய்

ஜப்பானிய பாரம்பரியத்தின் படி, கோய் மீன் ஒரு மாய மீன் ஆகும். இந்த பட்டர்ஃப்ளை கோய் (Butterfly Ko) மீனானது உரிமையாளருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்த்து தரவல்லது. இந்த மீன்களின் அழகிய வடிவங்களும் வண்ணங்களும் மீன் தொட்டியின் அழகைக் கூட்டும். இந்த அதிர்ஷ்டமான மீன் வெற்றியையும் வளர்ச்சியையும் குறிக்கிறது, அதனால்தான் இது மாணவர்களுக்கும் வேலை செய்யும் நிபுணர்களுக்கும் ஒரு நல்ல தேர்வாக உள்ளது.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

மலர் கொம்பு மீன்

நவீன ஃபெங் சுய் முறைப்படி, ஃப்ளவர் ஹார்ன் ஃபிஷ் (Flower Horn fish) ஒரு நல்ல அதிர்ஷ்டமான வசீகரமிக்கதும் செழிப்பை அளிக்கக் கூடியதுமாகும். இது ஒரு கலப்பின மீன், ஹுவா லுவோ ஹான் என்றும் அழைக்கப்படுகிறது. இது சக்திவாய்ந்த நேர்மறை ஆற்றல்களுடன் தொடர்புடைய ஒரு நல்ல அதிர்ஷ்ட மீன்.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

கப்பி மீன்

கவர்ச்சிகரமான வடிவங்களிலும், வெவ்வேறு வால் வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் இருக்கின்ற கப்பி மீன் (Guppy Fish)

மிகவும் அமைதியானது. இது உங்கள் மீன் தொட்டிக்கு சரியான தேர்வாகும். ஏனெனில், இவை வீட்டில் சாதகமானச் சூழலை உருவாக்க உதவுகின்றன.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

கோரி கேட்ஃபிஷ்

கோரி கேட்ஃபிஷ் (Cory catfish) கம்யூனிட்டி மீன்கள் ஆகும். கீழே உள்ள பாசிகளை உட்கொள்வதன் மூலம் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த அதிர்ஷ்டமான மீன் அமைதியானது. வீட்டிற்கு மிகுதியான அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. கேட்ஃபிஷ் வெவ்வேறு நீரின் தர நிலைகளிலும் வாழும் தன்மை கொண்டது.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

ஏஞ்சல்ஃபிஷ்

ஏஞ்சல்ஃபிஷ் (Angelfish) என்பவை ஃபெங் சுய் நன்னீர் மீன் தொட்டிகளைக் கொண்ட பல வீடுகளில் பிரபலமான செல்லப் பிராணியாகும். இந்த மீன்கள் அனைத்துண்ணியாகவும், உறைந்த உணவு மற்றும் நேரடி உணவுகளை உட்கொண்டு வாழும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இந்த நல்ல அதிர்ஷ்ட மீன், மெல்லிய மற்றும் தட்டையான உடலைக் கொண்டுள்ளது. இது நமக்கு உகந்த மங்களகரமானதாக நம்பப்படுகிறது.

Fish aquariums: Benefits of keeping fish aquariums to bring positivity to your home, as per Vastu Shastra

Read also : உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்தியாவில் பார்க்க வேண்டிய முதல் 10 இடங்களைப் பாருங்கள்

Source: Pinterest

வீட்டில் மீன் தொட்டிக்கு நன்னீர் அல்லது உப்பு நீர் மீன்களை தேர்ந்தெடுக்கலாம். மீன்களை வாங்குவதற்கு முன், அவை எந்த நீருக்குப் பொருந்தும் என்கிற தன்மையை சரிபார்த்து வாங்க வேண்டும். மீன் காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான மீன்களை விட வேண்டாம். ஏனெனில், மீன்கள் தங்களுக்கான இடப்பகுதியை அதிகம் விரும்புபவை. இடப்பற்றாக்குறை இருந்தால் மற்ற மீன்களை கொல்ல ஆரம்பிக்கலாம். மீன் காட்சியகம் அல்லது வீட்டில் உள்ள மீன் தொட்டிகளுக்கு வண்ணமயமான, அழகான மற்றும் ஆரோக்கியமான மீன்களைத் தேர்ந்தெடுங்கள்.

இதையும் வாசிக்க: வீட்டில் மூங்கில் செடி வைப்பதற்கான வாஸ்து குறிப்புகள்

மீன் தொட்டியில் மீன் இறந்தால் என்ன நடக்கும்?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மீன் தொட்டியில் ஒரு மீன் இயற்கையாக இறந்தால், அது வீடு அல்லது அலுவலகத்தின் பிரச்சனைகளை நீக்கிவிட்டதைக் குறிக்கிறது. வீட்டின் உரிமையாளர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, அந்த மீன் தனது உயிரைத் தியாகம் செய்கிறது என சில வாஸ்து வல்லுநர்கள் நம்புகிறார்கள். மேலும், மீன் தொட்டியில் உடனடியாக ஒரு புதிய மீனை மாற்றிட வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வாஸ்து முறைப்படி மீன் தொட்டியில் எந்த மீன் இருக்க வேண்டும்?

தங்கமீன், டிராகன் மீன் மற்றும் ஒரு கருப்பு மீன் ஆகியவற்றை உங்கள் தொட்டியில் வளர்க்கலாம்.

மீன் தொட்டியை எவ்வாறு பராமரிப்பது?

மீன் தொட்டி சுத்தமாக இருப்பதை உறுதி செய்து, தேவையான நீர் சுழற்சி / வடிகட்டுதல் கருவியை நிறுவி, பரிந்துரைக்கப்பட்ட அதிர்வெண் படி மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.

மீன் தொட்டியை நேரடியாக சூரிய ஒளியில் வைக்கலாமா?

மீன் தொட்டியின் மீது நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் மீன் தொட்டியை வைக்கக் கூடாது. ஏனெனில், அது மீன் தொட்டிக்குள் பாசி வளர்ச்சியை ஏற்படுத்தும். அத்துடன், நீரை பச்சை நிறமாக மாற்றிடும்.

அக்வாஸ்கேப்பிங் என்றால் என்ன?

அக்வாஸ்கேப்பிங் (aquascaping) என்பது ஒரு நிலப்பரப்பை உருவாக்குவது, பாறைகள், கற்கள் அல்லது சறுக்கல் மரங்களுடன் நீர்வாழ் தாவரங்களை வளர்ப்பது, சுரங்கங்கள் மற்றும் குகைகளை உருவாக்குவது ஆகும். இவை மீன் தொட்டிகளை சிறந்த முறையில் அழகாக்குகின்றன.

மீன் தொட்டி நல்ல அதிர்ஷ்டத்தை தருமா?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் ஒரு மீன் தொட்டியை வைத்திருப்பது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை உறுதிசெய்து செல்வத்தை ஈர்க்கும். இது சில வாஸ்து குறைபாடுகளை சரிசெய்வதற்கும் உகந்த பரிகாரமாகும்.

மீன் தொட்டியில் எத்தனை மீன்கள் இருந்தால் அதிர்ஷ்டம்?

வாஸ்து முறைப்படி, ஒரு நேர்மறையான ஆற்றல் ஓட்டத்தை உறுதிப்படுத்த, மீன் தொட்டியில் ஒன்பது மீன்களை வளர்க்க வேண்டும்.

வீட்டிற்கு எந்த நிற மீன் நல்லது?

மீன் தொட்டியில் வெவ்வேறு வண்ணங்களில் மீன்களை வளர்ப்பது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இது வீடு அல்லது அலுவலகத்தில் நேர்மறை அதிர்வுகளைக் கூட்டுவதுடன் செழிப்புக்கும் வழிவகுக்கிறது.

மீன் தொட்டியில் வைக்க மணி பிளான்ட் ஏற்ற செடியா?

மணி பிளான்ட் என்பது நீருக்கடியில் வளரும் செடி அல்ல. அதை தண்ணீரில் மூழ்கடிக்க முடியாது. அதன் வேர்களை மட்டும் நீருக்கடியிலும், அதன் இலைகளை வெளியிலும் வைக்க வேண்டும். இது நீரிலிருந்து பெரும்பாலான ஊட்டச்சத்துகளை உறிஞ்சுகிறது. இதனால் மற்ற நீர்வாழ் தாவரங்களுக்கு ஊட்டச்சத்து இல்லாமல் போகலாம்.

குழந்தைகள் வலம் வரும் வீட்டில் மீன் தொட்டியை நிறுவும்போது எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

மீன் தொட்டி வைக்கப்பட்டுள்ள மேடை உறுதியானதாகவும், எளிதில் சாய்ந்துவிடாதபடி இருப்பதையும் உறுதிப்படுத்துங்கள். மீன் தொட்டியில் ஏற வேண்டாம் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கண்ணாடிக்கு பதிலாக, அக்ரிலிக் மீன் தொட்டியை தேர்ந்தெடுங்கள். அனைத்து ஸ்டாண்ட்களும் தரையில் இருக்குமாறு வைக்கப்பட வேண்டும். நீர் சொட்டி மின்சார பெட்டிக்குள் நுழைவதைத் தடுக்க ட்ரிப் லூப்களைப் பயன்படுத்த வேண்டும். மீன் தொட்டியின் மேற்புறத்தில் பூட்டு பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.

நானோ மீன் தொட்டி என்றால் என்ன?

நானோ அல்லது மினி மீன் தொட்டி என்பது இப்பொது புதிதாக உருவாகியுள்ள ஒரு ட்ரெண்ட் ஆகும். இது ஒரு சிறிய கச்சிதமான மீன் தொட்டியாகும், இது 10 கேலன்களுக்கும் குறைவான தண்ணீரைக் கொண்டுள்ளது (தண்ணீரின் அளவு குறித்து ஒருமித்த கருத்து இல்லாததால் இது மாறுபடலாம்). இது ஒரு கச்சிதமான சுய-கட்டுமான சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகும்.

மிகவும் அதிர்ஷ்டமான மீன் எது?

வாஸ்து மற்றும் ஃபெங் சுய் முறைப்படி டிராகன் மீன் என்றும் அழைக்கப்படும் ஆசிய அரோவானா நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பின் சின்னமாகும். மேலும், மீன் தொட்டியில் தங்கமீன்கள் வைக்கப்படுவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை தினமும் மாற்ற வேண்டுமா?

இல்லை. இது உங்கள் மீனைக் கொன்றுவிடும். தண்ணீரை முழுமையாக மாற்ற வேண்டாம். ஒவ்வொரு வாரமும் சுமார் 20 சதவீத தண்ணீரை மாற்றுங்கள். உங்களிடம் வடிகட்டுதல் அமைப்பு இருந்தால், ஒரு மாதத்தில் 30 முதல் 50 சதவிகிதம் தண்ணீரை மாற்றுங்கள். தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா மீன் உயிர் வாழ உதவுகிறது, மேலும், தண்ணீரை முழுமையாக மாற்றுவது தீங்கு விளைவிக்கும்.

Source: https://ecis2016.org/.
Copyright belongs to: ecis2016.org

Source: https://ecis2016.org
Category: Tamil

Debora Berti

Università degli Studi di Firenze, IT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button